Posted by Indian Stocks on 9:44 AM

4324 அளவை தக்க வைத்திருக்கும் வரை 4464 மற்றும் 4510 இலக்குகள் தவிர்க்க முடியாதது. அதே சமயம் 4460 முதல் 4510 வரை அதிகப்படியான விற்பனையை சந்தை தாக்கு பிடிக்க வேண்டும்.
இன்று முக்கிய தாங்கு நிலை 4356. மிக முக்கிய தாங்கு நிலை 4324 மற்றும் 4275 அளவுகள்.
சிறிய தடை 4402. 4402க்கு மேல் தடைகள் 4425 ம‌ற்றும் 4445. 4445க்கு மேல் 4464 மற்றும் 4510.
காளைகளும், கரடிகளும் கடினமான போட்டியிடும்.

Posted by Indian Stocks on 9:50 AM

24.06.2009 அன்று 4198 தக்க வைத்து 4275 தாண்டினால் 150 புள்ளிகள் இலக்கு நிர்ணயித்தோம்...
இன்று 4382க்கு மேல் தொட‌ர்ந்து ப‌ரிவ‌ர்த்த‌னையானால் 4420, 4439 இல‌க்குக‌ளைத் தொடும். அதிக‌ ப‌ட்ச‌மாக‌ 4464 அள‌வைக்கூட‌ தொட‌லாம்.
4464 மிகப்பெரிய‌ த‌டையாக இருக்கும். 4464 தாண்டி முடிவ‌டைந்தால் மட்டுமே சந்தை ஏற்றத்தை சந்திக்கும்.
முக்கியமான தாங்கு நிலை 4353. மிக முக்கியமான தாங்கு நிலை 4326.

Posted by Indian Stocks on 9:46 AM

பார்வையாளர்களின் கருத்துகள் எதுவும் வராததால் தற்காலிகமாக செய்திகளுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது..
கருத்துகளை இங்கேயோ அல்லது indianstock7@gmail.com பதிவு செய்யவும்

Posted by Indian Stocks on 9:42 AM

இன்று அதிகப்படியான ஏற்ற, இறக்கங்கள் தவிர்க்க முடியாதது‌.

உடனடி தடைகள் 4324, 4336. 4336க்கு மேல் 4356 மற்றும் 4382 அளவுகளை எதிர்பார்க்கலாம்.

உடனடி தாங்கு நிலை 4288 - 4280 அளவு...
இந்த மாத ரோல் ஓவர் குறைவாக இருப்பதால்... கவனமாக இருக்கவும்

Posted by Indian Stocks on 9:33 AM

இன்று உட‌ன‌டி தாங்கு நிலை 4226 - 4214 அளவுகள்.

இன்று மிக முக்கியமான தாங்கு நிலை 4198.

உடனடி தடை 4252. முக்கியமான தடை 4275. 4275க்கு மேல் 4305, 4324 அளவுகளை தொட வாய்ப்புள்ளது. பலமான‌ தடை 4340

4198 அளவை தக்கவைத்துக்கொண்டு 4275க்கு மேல் பரிவர்த்தனையானால் 100-150 புள்ளிகள் வரை குறைந்தபட்சம் உயர வாய்ப்புள்ளது.

500க்கும் மேற்பட்ட புள்ளிகளின் இறக்கத்திற்கு பிறகு ஷார்ட கவரிங் மூலம் காளைகள் தங்கள் திறனை வெளிப்படுத்த முற்படலாம்.

அதேசமயம்4460 க்ககு மேல் முடிவடையும் வரை சந்தை கரடிகளுக்கு பிடித்தமான ஒன்று

Posted by Indian Stocks on 8:49 AM

நேற்றைய வர்த்தகம் மிக முக்கியமான செய்திகளை கரடிகளுக்கு ஆதரவாக கோடிட்டு காட்டியுள்ளன.... 4340 என்ற சிறிய தடையைத் தாண்டி வசதியாக பரிவர்த்தனையாகாமல் 4293, 4256, 4236 என ஒவ்வொரு முக்கிய தாங்கு நிலைகளை உடைத்து 4236க்கு கீழ் சந்தை முடிவடைந்தது கரடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதை தெள்ளத் தெளிவாக உணர்த்தியுள்ளது.

நாங்கள் குறிப்பிட்ட‌ 4256 ம‌ற்றும் 4236 அள‌வுகளில் காளைகள் சந்தையை சரிவிலிருந்து மீட்க பெரிதும் போராடி, 20-30 புள்ளிகள் வ‌ரை உயர்வும் க‌ண்டு முடிவில் ச‌ந்தையை க‌ர‌டிகளின் க‌ட்டுப்பாட்டிலேயே விட்டு வைத்த‌ன‌ர்.

இனி....
சந்தையில் கரடிகளின் கைகளை மேலும் வலுப்படுத்தும் வண்ணம், உலக சந்தைகள் குறிப்பிடத்தகுந்த வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

நிஃப்டி ஃப்யூச்சரின் முக்கிய தாங்கு நிலைகள் 4204 மற்றும் 4180, ஆனால் துவக்கம் 4180க்கு கீழே கீழ் இடைவெளியுடன் இருக்கும் பட்சத்தில், மேலும் ஒரு மிகப்பெரிய சரிவை சந்தை தவிர்க்கவே முடியாது

4180க்கு கீழ் 4159, 4125, 4090 என்பவை மிக எளிதான இலக்காக அமையும், அதேவேளை புதிதாக Short செல்வதை கட்டாயம் தவிர்க்கவும் அல்லது 4180 மற்றும் 4205 அளவுகளை Stop Loss ஆக வைத்துக்கொள்ளவும். 4159, 4125 அல்லது 4090 அளவுகளிலிருந்து Dead CAT Bounce வர கொஞ்சம் வாய்ப்புள்ளது. ஒருவேளை 4090 க்கு கீழ் முடிவடைந்தால் 4025 மற்றும் 3980 அளவுகளை நோக்கி நிஃப்டி எளிதாக செல்லும்.

இன்றைய‌ த‌டைகள் 4256 ம‌ற்றும் 4275. ஒருவேளை 4275க்கு மேல் இன்று நிஃப்டி ஃப்யூச்ச‌ர் முடிவ‌டைந்தால் 100-150 புள்ளிகள் வ‌ரை வ‌ரும் நாட்க‌ளில் வாய்ப்புள்ள‌து. (குறைவான‌ வாய்ப்புக‌ள் ம‌ட்டுமே)

4200க்கு கீழ் தொட‌ர்ச்சியாக‌ மூன்று நாட்க‌ள் முடிவ‌டைந்தால் எதிர்பார்க்கும் இல‌க்குக்க‌ள் 3800 அல்லது 3500 என்பதையும் ம‌ன‌தில் கொள்ள‌வும். (இது உட‌னே நிக‌ழாது)

Posted by Indian Stocks on 9:33 AM

வருகின்ற நாட்கள் அதிகப்படியான ஏற்ற இறக்கத்தை சந்தை சந்திக்கும் என்பதை அனைவருமே அறிவோம்.
இன்று தொடர்ந்து 4324க்கு மேல் தொடர்ந்து பரிவர்த்தனையானால் 4350, 4376 அளவை தொட பிரகாசமான வாய்ப்புள்ளது. கவனத்தில் கொள்ள வேண்டிய இன்றைய மிக முக்கிய தடை 4376-4385 அளவு. 4385க்கு மேல் ஒருவேளை முடிவடைந்தால் மேலும் ஷார்ட் கவரிங் மூலம் வேகமான ஏற்றத்தை சந்தை சந்திக்கும். அடுத்த மிகப் பெரிய தடைகள் 4430 மற்றும் 4460 அளவுகள்.

இன்று உடனடியான தாங்கு நிலை 4293. 4293 க்கு கீழ் முக்கியமான தாங்கு நிலைகள் 4256 மற்றும் 4236

Posted by Indian Stocks on 9:16 AM

நாங்கள் கூறிய தடையை 4330 அளவை தாண்டமுடியாமல் 4325 வரை மட்டுமே தொட்டது. பின்னர் துரிதகரமான வீழ்ச்சி மூலம் கீழ் நிலை இலக்குகள் அனைத்தையும் எளிதாக அடைந்தது. 4200 அளவு மிக முக்கியமான தாங்குநிலையென்று (சப்போர்ட்) குறிப்பிட்டிருந்தோம். மிகச்சரியாக தாங்குநிலையிலிருந்து... மிக வேகமாக ஏறி சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்தது. 4200 தாங்குநிலையிலிருந்து ஏறுவதற்கு மிக முக்கிய காரணம் அதிகப்படியான ஷார்ட் கவரிங்கே காரணம். வெள்ளிக்கிழ‌மையுட‌ன் கூடிய வார‌ முடிவு 4385க்கு கீழ் முடிவ‌டைந்துள்ளதால், காளைக‌ள் ச‌ற்று க‌ட்டுப்பாட்டிற்குள் வ‌ந்துள்ள‌து மீண்டும் உறுதி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

Posted by Indian Stocks on 9:37 AM

நேற்று கூறியபடி 4390 தடையை தாண்டாமல், 4300 தாங்குநிலையை உடைத்தவுடன்... அதிகப்படியான வீழ்ச்சியை சந்தை சந்தித்தது.
இன்று.........
4280 அளவு ஒரு சிறிய தாங்குநிலையாக இருக்கும். 4280 க்கு கீழ் 4250, 4225, 4203 அளவு வரை செல்லலாம். 4200 அளவு மிக முக்கியமான தாங்குநிலை. 4200க்கு கீழ் முடிவடையும் பட்சத்தில் மீண்டும் கரடிகளின் ஆதிக்கம் சந்தையில் தொடரும்.
4325- 4330 அளவு முக்கியமான தடை. 4330க்கு மேல் தொடர்ச்சியாக பரிவர்த்தனையாகும் பட்சத்தில் 4360 மற்றும் 4385 அளவை தொடலாம்.
இன்றைய முடிவு மிக முக்கியம். 4385க்கு கீழ் வசதியாக முடியும் பட்சத்தில், சந்தையில் கடுமையான இறக்கம் வரும் என்பதை உறுதி செய்யலாம். 4385 க்கு மேல் முடிவடையும் பட்சத்தில் ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Posted by Indian Stocks on 9:07 AM

செவ்வாய் கிழமை கூறியது போல் சந்தை முழுக்க கரடியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

இன்று த‌டைக‌ள் 4363-4390 அள‌வு.

4330க்கு கீழ் ப‌ரிவ‌ர்த்த‌னையாகும் ப‌ட்ச‌த்தில் 4300 ம‌ற்றும் 4275 நிலைகளை அடைய‌லாம். 4275 குறிப்பிட‌த்த‌குந்த‌ தாங்கு நிலை. 4275க்கு கீழ் 4180 என்ப‌து த‌விர்க்க‌முடியாத‌ இல‌க்கு.

வரும் நாட்களுக்கு மிக‌ முக்கிய‌ த‌டை 4460-4480 நிலை. எந்த‌ ஒரு உய‌ர்வையும் விற்ப‌த‌ற்கான வாய்ப்பாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திககொள்ள‌வும்.

நேற்று போல் மிக வேக‌மான இறக்கத்தை பார்க்க முடியாது. ஆனால் சீரான‌ இற‌க்க‌த்தை ச‌ரியான காலஇடைவெளியில் எதிர்பார்க்க‌லாம். நாளை 4385க்கு கீழ் முடிவடை‌ந்தால், வ‌ரும் வார‌ங்களில் நிஃப்டி 4000 மற்றும் 3800 அளவைத் தொட பிரகாசமான வாய்ப்புள்ளது.

Posted by Indian Stocks on 9:33 AM

நாங்கள் எச்சரித்தது போலவே சந்தை கரடியின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.

4530 மிக முக்கியமான தடை.

இன்று நிஃப்டி 4480க்கு கீழ் தொடர்ந்து பரிவர்த்தனையாகும் பட்சத்தில் மேலும் சரிவுகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

4480 க்கு கீழ் 4455, 4415, 4385 ஆகிய தாங்கு நிலைகள் உள்ளன.


4385-4415 அளவில் காளைகளுக்கும் கரடிகளும் இடையே கடும் போட்டி நிலவும்.

இன்று 4480 அளவை நாளின் முடிவில் தக்க வைத்தால் மட்டுமே ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.

ஒருவேளை 4385க்கு கீழ் இந்த வாரம் முடிவ‌டையும் பட்சத்தில் நிச்சயமாக 4000 அல்லது 3800 அளவை இரண்டு அல்லது மூன்று வாரங்களில் எதிர்பார்க்கலாம்.

ரிலையன்ஸ் பங்கின் நேற்றைய வீழ்ச்சி சந்தை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான ஒன்று, ஆனால் இன்றோ நாளையோ ரிலையன்ஸ் பங்கில் ஏற்படும் மாற்றம் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.

Posted by Indian Stocks on 9:53 AM

2008 ஜனவரி மாதத்திற்கு பின் வெள்ளிக்கிழமை சந்தை (நிப்டி) Bearish Engulfing வடிவில் முடிவடைந்திருக்கிறது. 2500 புள்ளிகளின் உயர்வுக்குப் பின் ஒரு நியாமான இறக்கத்திற்கான அறிகுறி.... 4700க்கு மேல் வசதியாக தொடர்ந்து 3 நாட்கள் முடிவடையும் பட்சத்தில் அடுத்த கட்டமாக பெரியதொரு ஏற்றத்தை காண முடியும். அதுவரை எந்த ஒரு உயர்வையும் அந்த நாளின் முடிவில் 4700 அளவை ஸ்டாப்‍ லாசாக வைத்து விற்பதற்காக பயன் படுத்தவும். குறைந்த பட்ச இலக்கு 4300. மேலும் தாங்குநிலைகளை (சப்போர்ட்) உடைக்கும் பட்சத்தில் 4000 அல்லது 3800 அளவை தொடலாம். ஒரே நாளில் இதெல்லாம் நடக்காது, பொறுமை அவசியம்.
கருத்துகளை தெரிவிக்கவும்..

Posted by Indian Stocks on 9:20 AM

தொடர்ச்சியாக மிக வேகமாக ஏறிய சந்தைக்கு கடந்த வார முடிவு, சந்தை களைப்படைந்த நிலையை காட்டுகிறது. வெள்ளிக்கிழமை முடிந்த சந்தையின் வாரக்குறியீடு... டோஜி வடிவில் முடிவடைந்திருக்கிறது. வீக்லி RSI பல வருடங்களுக்கு பிறகு over bought நிலையில் உள்ளது. டோஜி குறியீடு சந்தை ஏறுமுகமாக இருப்பதிலிருந்து கீழ் நோக்கி திரும்ப 60 சத வாய்ப்பு உள்ளதை உணர்த்துகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். உயர் நிலையில் மிகுந்த கவனம் தேவை....

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்....

Posted by Indian Stocks on 9:15 AM

இந்திய பங்கு சந்தை பற்றி... என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் எழுதப்போகும் விசயங்கள் என்னுடைஅ தனிப்பட்ட கருத்து மட்டுமே, தயவுசெய்து முடிவு உங்க்ளுடையாதாக இருக்கட்டும்

Search